தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயம் போர்ச்சுகீசியர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் ஆகும். இந்த பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 437-ம் ஆண்டு திருவிழா இன்று காலை 7:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.
இந்த திருவிழாவின் திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழா இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து, இந்த விழாவை முன்னிட்டு 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.