மகன் கண் முன்னே துடித்து உயிரிழந்த தாய்!திடுக்கிடும் தகவல்!
மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி ஆவார்.இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள துணி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.அவர் தான் தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் மதுரா கல்லூரி அருகே சென்றபோது செல்லமணி என்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது பேருந்து,இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தாய் மகன் இருவரும் கீழே விழுந்துள்ளார். மகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பிவிட, தாயின் தலையில் பேருந்தின் பின்புற சக்கரம் ஏறியதால் விஜயலட்சுமி சுமார் ஒரு மணி நேரமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது தகவல் அறிந்து அவசர ஊர்தி வந்த சில நிமிடத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது ..அவசர ஊர்தி வரும்வரை காத்திருக்காமல் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவர் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தன் கண் முன்னே தாயின் உயிர் பறிபோனதை கண்டு கதறி அழுத சிறுவனை பக்கத்தில் இருந்தவர்கள் தேற்றினர்.போக்குவரத்து விதிப்படி, இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.