நெல்லையில் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு…!!
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.