திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் மூன்று நாட்கள் பிரச்சாரம்
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.இந்த நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .வரும் 27ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலின் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.