ஆகஸ்ட் 7 வரை நாடாளுமன்ற கூட்டம் நீட்டிப்பு
17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சில முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ள காரணத்தால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளையுடன் முடிவடையுள்ள நிலையில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.