6 கோடிக்கும் அதிகமானவர்களை ஏமாற்றிய PACL நிறுவனம்! 70,000 கோடி என்னவானது?! செபி விளக்கம்!
ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கிய PACL நிறுவனமானது, சாமானிய மக்களிடம் பணம் பெற்று வட்டி அதிகமாக பயனர்களுக்கு பெற்று தந்தது. ஆரம்பித்த 30 ஆண்டுகளில் எந்தவித பிரச்னையும் இன்றி பணம் முதலீட்டர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
அதன் பிறகு முதலீட்டாளர்களுக்கு சரிவர பணம் திரும்ப கிடைக்காமல் இருந்ததால் முதலீட்டாளர்கள், செபியிடம் புகார் செய்தது. செபி என்பது, அரசாங்க நிறுவனமான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆகும்.
பின்னர் இந்தியா முழுவதும் சுமார் 6 கோடிக்கும் அதிகமான முதலீட்டர்களிடம் இந்த மாதிரியான பணம் திரும்ப வராமல் 70 ஆயிரம் கோடி பணம் திரும்ப வராததால் இந்த புகார் நீதிமன்றம் சென்றது.
இதனை விசாரித்த நீதிபதி, PACL நிறுவனத்தின் சொத்துக்களை விற்று அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை செபி ஏற்று கொண்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள செபி அலுவலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஆயிரகணக்கான முதலீட்டாளர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து, செபி இணையதளத்தில், முதலீடு பத்திரங்கள், பான் எண் முதலியவற்றை பதிவு செய்ய சொல்லப்பட்டுள்ளது.
இம்மாதம் 31ஆம் தேதிக்குல் தங்கள் முதிர்வு தொகையை முதலீட்டர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக செபி தெரிவித்துள்ளது.