சென்னையில் 90 ரூட் தலைகள் கண்டுபிடிப்பு! வேட்டைஆரம்பம்!
சென்னையில் அண்மைகாலமாக கல்லூரி மாணவர்களிடையே வன்முறை அதிகரித்து, பிரபல ரவுடிகள் போல நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பிரச்சனை செய்து வருகின்றனர்.
இது குறித்து பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக முன்னாள் சென்னை கல்லூரி மாணவர்கள், ரூட் தலைகள் என பலரை பற்றி விசாரித்து வருகின்றனர்.
தற்போது 90 ரூட் தலைகள் சென்னை போலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்னர். அடுத்தகட்டமாக இவர்களையும், இவர்கள் பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளனர்.