விஜய் சேதுபதி எனது காதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமை! முரளிதரன் நெகிழ்ச்சி!
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை தற்போது திரைப்படமாக வளரவுள்ளது. இந்த படத்தில் முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
இந்த படத்தினை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளார். தார் மோஷன் என்ற பட தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இப்படம் பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில், ‘ விஜய் சேதுபதி எனது கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ‘ என அவர் கூறியதாக திரைவட்டாரத்தில் கூறிவருகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 800 விக்கெட் வீழ்த்தியிருந்ததால் படத்திற்கு 800 என் தலைப்பு வைக்க படக்குழு எண்ணி வருகிறது.