மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது-மைத்ரேயன் பேட்டி
மாநிலங்களவை எம்பி-யாக இருந்த அதிமுகவின் மைத்ரேயனின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது.இந்த நிலையில் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது .தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன், வாய்ப்பு அளிக்கவில்லை . ஒற்றை தலைமை, இரட்டை தலைமை இரண்டிலுமே சாதக, பாதகங்கள் உள்ளது என்று தெரிவித்தார்.