நெல்லையில் கொல்லப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி
நெல்லையில் நேற்று முன்தினம் திமுகவின் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி ,அவரது கணவர் மற்றும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லையில் கொல்லப்பட்ட திமுகவின் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.