விஷாலுக்கு சம்மன்! நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு!
நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு TDS பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த டிடிஎஸ் தொகையானது ஊழியர்களுக்கு திரும்ப கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக சம்மன் நீதிமன்றம் அனுப்பியுள்ளது. நடிகர் விஷால் ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.