தினமும் 50 டன் ஒட்டக சாணத்தை வைத்து சிமெண்ட் தயாரிக்கும் அமீரக அரசு!
மாட்டுசாணம் மற்றும் விலங்குகளின் கழிவை மனிதர்களுக்கு உதவும் வகையில் பண்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அரபு நாடுகளில் பாலை வன போக்குவரத்துக்கும், பால் தேவைக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஒட்டகங்கள்.
ராஸ் அல் கைமா என்ற இடத்தில் 9 ஆயிரம் ஒட்டகங்கள் உள்ளன.அந்த ஒட்டகங்களின் சாணத்தை சிமெண்ட் தொழிற்சாலையில் கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.அமீரக அரசின் கழிவு மேலாண்மை அமைப்பு ஒட்டக சாண சேகரிப்பு மையங்கள் அமைத்து உள்ளது.
ஒரு ஒட்டகம் தினமும் 8 கிலோ கழிவை வெளியேற்றுகிறது.சுற்று சூழலை பாதுகாக்கும் வகையிலும் , விலங்குகளின் கழிவை வீணாக்காமல் அதை பயன்படுத்துவதாக அந்த சிமெண்ட் நிறுவனம் கூறியுள்ளது.மேலும் இரண்டு டன் ஒட்டகத்தின் சாணம் பயன் படுத்துவதால் ஒரு டன் நிலக்கரி மிச்சப்படுத்தலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஒட்டகங்களின் கழிவை உடனடியாக வெளியேற்றி தொழிற்சாலைக்கு அனுப்புவதால் ஒட்டகம் இருக்கும் இடமும் சுத்தமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.பத்தில் ஒரு பங்கு ஒட்டகங்களின் கழிவையும் ,மீதி உள்ள ஒன்பது பங்கு நிலக்கரியை பயன்படுத்து கின்றனர். சிமெண்ட் தயாரிக்க தினமும் 50 டன் ஒட்டகங்களின் சாணம் பயன்படுத்தப் படுகிறது.