இலங்கை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!
தாழ் சினிமாவின் தற்போதைய முன்னனி நடிகர்களில் மிகவும் பிஸியானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி ( தெலுங்கு). மார்க்கோனி ( மலையாளம் ) என பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளாராம். இந்த படம் இந்தாண்டு தொடங்கி அடுத்த வருடம் இறுதிக்குள் ரிலீஸ் ஆக உள்ளதாம்.
இந்த படத்தை யார் இயக்குகிறார், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என அதிகாரபூர்வ தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முத்தையா முரளிதரன் இலங்கை தமிழர் ஆவார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 800 விக்கெட்களை கைப்பற்றை உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.