ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்யும் தல ரசிகர்கள் : காரணம் இதுவா?!
தல அஜித்குமார் தன் தொழில் நடிப்பது மட்டுமே என்று கூறி தன் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டார். ஆனாலும் அவரது படங்களுக்கு கட்டவுட் வைப்பதும் பாலாபிசேகம் செய்வதும், அவரது பிறந்த நாளான்று நலத்திட்டங்களை செய்வதும் என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதுவரை பலரின் பள்ளி படிப்புக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கு நல்ல உடை, சாப்பாடு வழங்குவது என செய்து வந்தனர். இந்நிலையில் அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உதவி செய்து அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தனர்.
source : dinasuvadu.com