விவசாய கிணற்றில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலம்!
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுப்பிரமணி ஆவார்.இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சோளிங்கர்-வாலாஜாபேட்டை சாலையில் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகளின் உதவியோடு சடலத்தை மீட்டுள்ளனர்.
பின்னர் சடலத்தை பார்த்த காவல்துறையினருக்கு அந்த நபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இதன் அடிப்படையில் அந்த இளைஞரின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் சுப்பிரமணி என்று உறுதியாகியுள்ளது.இந்த கொலை சம்பவம் காரணமாக காவல்துறையினர் வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.