3 கல்லூரிகள் மட்டுமே முழுதாக நிரப்பியுள்ளன! மூன்றாம் கட்ட கலந்தாய்விலும் ஒரு சீட் கூட நிரம்பாமல் இருக்கும் பல கல்லூரிகள்!
500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள், வருடா வருடம் லட்சக்கணக்கில் பொரியியல் பட்டதாரிகள் வேலையின்றி வெளியே வந்து தவிக்கின்றனர். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பொறியியல் படிப்புகளுக்கு மவுசு குறைந்து கொண்டே வருகிறது.
இந்தாண்டு தற்போது வரை 3வது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதுவரை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், சேலம் கைத்தறி கல்லூரி, சிவகங்கை சிக்ரி கல்லூரி ஆகியவை முழுதாக நிரம்பி விட்டன.
அடுத்ததாக 8 கல்லூரிகளில் 99 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. 10 கலோரிகளில் 90 முதல் 98 சதவீத இடங்கள் நிரப்பிவிட்டன. 12 சதவீத 80 முதல் 89 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டான. 23 கல்லூரிகளில் 60 முதல் 79 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன.
115 கலோரிகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. 23 கல்லூரிகளில் ஒரு சீட் கூட இன்னும் நிரம்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
1,72,940 காலியிடங்களில் 45,662 இடங்களே நிரம்பியுள்ளன. இன்னும் 37598 மாணவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.