குடிநீர் பிரச்சனையை தீர்க்க சூப்பர் டிப்ஸ்! பிரபல நடிகையின் யோசனை!
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது சொந்த ஊர் சென்னை. ஆனால், இவர் திருமணத்திற்கு பின் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு சிறந்த யோசனையை சொல்லியுள்ளார்.
அது என்னவென்றால், தற்போது ஐதராபாத்தில் குடிநீர் பிரச்னை நிலவுவதாகவும், இங்கு மட்டுமல்லாது சென்னையிலும் இதே நிலை தான் உள்ளது. வரும் காலங்களில் இந்த நாடு முழுவதுமே தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் அவரது ரசிகர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். அந்த சவாலை அவரும் செய்ய உள்ளாராம். அது என்ன சவால் என்றால், ஒரு பக்கெட் தண்ணீரோடு காலை கடன்களை முடிக்க போகிறேன். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த சவாலை அனைவரும் ஏற்று அனைவரும் இதன்படி செய்ய வேண்டும் என்றும், சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் சமந்தா கூறியுள்ளார்.