சினிமா திரையுலகின் மாஸ் ஹீரோ சூர்யாவின் பிறந்தநாள் இன்று!
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகராவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவை பொறுத்தவரையில் இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகவும் சிறந்தவர் ஆவார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது, சமூகத்திலும் அக்கறை கொண்டவராக வலம் வருகிறார்.
நடிகர் சூர்யா நடத்தும், அகரம் பவுண்டேசன் மூலம் பல மாணவர்கள் தங்கள் லட்சியத்தை அடைந்துள்ளனர். இன்றும் இவர் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இவர் தமிழ் திரையுலகில், நேருக்குநேர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா சினிமா திரையுலகில் சாதாரண ஹீரோவாக அறிமுகமானவர். இன்று மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். இவர் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.