வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திட வேண்டும்-மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திட வேண்டும்.ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, கருணாநிதியின் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம்.
ஆசை வார்த்தைகளாலும் அடுக்கடுக்கான பொய்களாலும் ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தாலும் மக்களின் மனங்களில் திமுகவே நிரந்தரமாக ஆட்சி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.