தமிழக மக்கள் சார்பில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து – முதல்வர் அறிக்கை!
சந்திராயன் – 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தி இருப்பதற்க்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள முதல்வர், சந்திராயன் விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். நிலவில், விண்கலத்தை தரை இறங்கி ஆய்வு செய்த ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் ஒன்றாக மாற்றியிருப்பதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்த சாதனை, இந்திய சிறுவர்கல் மற்றும் இளைஞர்களை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட வைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.