கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம்! அவசர வழக்காக விசாரிக்க முடியாது! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சென்றவாரம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் காலம் தாழ்த்தப்பட்டதால் வாக்கெடுப்பு நடைபெறாமல் போனது.
இது குறித்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகாரளித்தனர். ஆளுநரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்து இருந்தார். ஆனால் கெடுவையும் தாண்டி விவாதம் நடைபெற்றதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
தற்போது விடுமுறை நாளை அடுத்து இன்று சட்டசபை கூடவுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், ஷங்கர் என இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.