இந்திய அணியில் இடம்பெறாத தல தோனி…ரசிகர்கள் ஏமாற்றம் !
உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 17,18 நடக்கவிருந்த தேர்வு குழு கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. மும்பையில் இன்று எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கலந்து ஆலோசித்து இந்திய அணியை தேர்வு செய்தனர்.
சற்று முன் பிபிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோற்கொள்ளும் டி20, ஓடிஐ, டெஸ்ட் ஆகிய தொடருக்கு இந்திய அணியை வெளியிட்டுள்ளது. இந்த மூன்று பிரிவுகளுக்கும் விராட் கோலி மீண்டும் கேப்டனாக பதவியேற்றுள்ளார்.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்பாட்ட தல எம்.எஸ் தோனி ஒரு போட்டியில் கூட இடம்பெறவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். தோனியும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தனது இராணுவ பணியாற்ற போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.