பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும்-அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் இலவசமாக 3 டயாலிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது . 2013 , 2014ம் ஆண்டில் ஆசிாியா் தோ்வெழுதி 82 ஆயிரம் போ் பணிக்காக காத்திருக்கின்றனர். கலந்தாய்வு நடத்தப்பட்டு பாடவாாியாக தோ்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும்.
பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும்.ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி பாடவாரியாக தேர்வு செய்து பணி தரப்படும் என்று தெரிவித்தார்.