காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுமுதலமைச்சர் பழனிசாமி
கோவையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தொகுதியில், எந்த வாக்குறுதியை அளித்து திமுக மக்களிடம் வாக்கு கேட்கும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாதபோது மக்கள் அவர்களை எப்படி நம்புவார்கள் .
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. டிக் – டாக் செயலியை தடைசெய்வது நல்லது தான், இளைஞர்கள் உட்பட பலருக்கும் இடையூறாக உள்ள செயலியை தடைசெய்வது தவறில்லை என்று தெரிவித்தார்.