மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறப்பு

Default Image

மார்கழி மாதம் தொடங்கிவிட்டது மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க புறப்பட்டு கொண்டு இருகின்றனர். மண்டல பூஜை நிறைவுற்றதும், பெருவழி பாதையில் ஐயப்ப தரிசனத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருகின்றனர்.
மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15–ந்தேதி திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. ஏராளமான பக்தர்கள் ஐயப்ப தரிசனம் செய்தனர். மண்டல பூஜை கடந்த 26–ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சனிக்கிழமை அன்று திறக்கப்படுகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தனர். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். மற்ற விஷேச பூஜைகள் நடைபெறாது என்பதால், இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்பு கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை முதல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.
புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இந்த மாதம் 14–ந்தேதி நடைபெற உள்ளது. மகர விளக்கு தினத்தன்று சுவாமி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வழியாக கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக வருகிற இந்த மாதம் 12–ந்தேதி எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11–ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐய்யப்ப பக்தர் குழுவினரின் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெறும். அடுத்து ஜனவரி16–ந்தேதி முதல் ஜனவரி 19–ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20–ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்