டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா திக்ஷித் உடலுக்கு நேரில் பிரதமர் மோடி நேரில் அஞ்சலி!
டெல்லியில் இன்று காலமான முன்னால் முதல்வர் ஷீலா தீக்ஷித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் தொடந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஷீலா தீக்ஷித். காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த இவர் இந்தியாவில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெயரும் இவர்க்கு உண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டெல்லி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி இன்று மாலை நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.