செம்பருத்தி டீயை நாம் தினமும் குடித்து வருவதால் நமது உடலில் இந்த இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கிறதா !

இன்றைய தலைமுறையினர் பல வகையான நோய்களால் அதிகம் பாதிக்க பட்டு வருகிறார்கள். இத்தகு காரணம் என்னவென்றால் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம். நமது உடலில் உள்ள பல நோய்க்களுக்கு குணப்படுத்தும் அருமருந்தாக செம்பருத்தி டீ விளங்குகிறது. எனவே தினம் ஒரு கப் செம்பருத்தி டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

செம்பருத்தி டீ :

செம்பருத்தியை நீரில் நன்கு கொதிக்க வைத்து சிறிதளவு தேன் கலந்து குடிப்பதால் அது நமது உடலில் பல வகையான மாற்றங்களை அது செய்கிறது.

இரத்த அழுத்தம் :

 

நமக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும் நாட்களில்  மனஅழுத்தத்தை குறைத்து இதயத்தை  நன்றாக வைத்து கொள்ள உதவுகிறது. தினமும் ஒரு கப் செம்பருத்தி டீயை காலை உணவு உண்பதற்கு முன்பு எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது.

மாதவிடாய் பிரச்சனை :

மாதவிடாய் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு செம்பருத்தி டீ  அருமருந்தாக பயன்படுகிறது.  மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான வலிகளை போக்க இது பயன்படுகிறது.

காய்ச்சல் :

காய்ச்சல் வந்தாலே நமது உடலில் உள்ள பல உறுப்புகளையும்  கிருமி எளிதில் தாக்கி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம்மை வலுவிழக்க செய்கிறது.

காய்ச்சல் வந்தவர்கள் தினமும் ஒரு செம்பருத்தி டீ யை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது காய்ச்சலை உண்டாக்க கூடிய கிருமிகளையும் போராடி அழிக்கிறது.

கர்ப்பகாலம் :

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு கப் செம்பருத்தி டீயை குடித்து வந்தால் அது உடலில் உள்ள ஹார்மோன்களை சீராக வைத்திருக்க உதவுகிறது.