சுதந்திர தின உரை – நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு!
சுதந்திர தினத்தன்று தம் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டாவது முறையாக பெரும்பான்மையிலான எண்ணிக்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மோடி ஆறாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் நாட்டின் கோடியை ஏற்றி வைக்கிறார். கோடி ஏற்றியதும் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பேச இருக்கும் நிகழ்வில் நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் பங்கு இருக்க வேண்டும் என்று எண்ணி ஒரு முறையை அறிமுகம் செய்துள்ளார்.
இதற்காக தமது சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் குறித்து நமோ செயலியில் தங்கள் கருத்துக்களை பதிவிடலாம் என்று கூறியுள்ளார்.