தவறான பாதையில் வந்ததை தட்டி கேட்டதற்காக காரைக் கொண்டு இடித்தவர் கைது!
லண்டனில் உள்ள ரெஜினான் பூங்கா அருகில் கார்கள் செல்லவும் , சைக்கிள்கள் செல்லவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் கார்கள் செல்லும் பாதையில் இருந்து ஒரு கார் சைக்கிள்கள் செல்லலும் பாதையில் திடீரென வந்தது.
சைக்கிள்கள் செல்லலும் பாதையில் வந்த காரை பார்த்த ஒருவர் காரை நிறுத்தி இது ஒரு வழி பாதை என கூறி திரும்பி செல்லுமாறு கூறினார்.ஆனால்அந்த நபர் கூறியதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் காரை ஒட்டி வந்த நபர் காரை திருப்பி போகாமல் அங்கேயே நிறுத்தி இருந்தார்.
பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது திடீரென அந்த காரின் உரிமையாளர் தன்னை திரும்பி போக சொன்னவரை காரை கொண்டு இடித்து தள்ளினார்.இதை அறிந்து அங்கு வந்த காவல் துறை தவறான பாதையில் காரை ஒட்டி வந்த கைது செய்தனர்.இந்த தவறை தட்டி கேட்ட அந்த நபருக்கு காவல் துறை சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.