காவல் துறையினருக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 10 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்படும்-முதலமைச்சர் பழனிசாமி
பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், காவல் துறையினருக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 10 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்படும்.
மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொன் மாணிக்கவேல் தன்னிச்சையாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 204 அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.