வேலூர் மக்களவை தேர்தல் :திமுக வேட்பாளர் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் வேட்பு மனுக்கள் ஏற்பு
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.
இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.