biggboss 3: செய்த தப்புக்கு தண்டனையை பெற்று தானே ஆகணும்! முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! ஜெயிலை பரிசளித்தது பிக்பாஸ் இல்லம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மீராமீதுன் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவர் அழகி போட்டி நடத்துவதாக ரூ.50 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக இவர் மீது ரஞ்சிதா பண்டாரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து, மீராமிதுன் தன்னை கைது செய்யக் கூடும் என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். இதனையடுத்து, மீராமிதுணுக்கு, ரூ. 50 ஆயிரம் உத்தரவாத தொகை செலுத்த உத்தரவிட்டு, நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.
இந்நிலையில்,இவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தாலும், பிக்பாஸ் இல்லத்திற்குள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.