பெண்ணை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து 56 லட்சம் பறித்த நபர்!மீண்டும் பொள்ளாச்சியில் நடந்த துயரம்!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
அதில் அவருக்கு திருமணம் ஆகி கடந்த 9 ஆண்டுகள் ஆகியதாகவும் அவரும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டதாக கூறியுள்ளார்.
இருப்பினும் தற்போது அவர் சென்னையில் உள்ள கிண்டியில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.இவருக்கு அதே நிறுவனத்தில் பணியாற்றும் கிசோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அதுவே பலமாகி காதலாக உருமாறியுள்ளது.அவரை கிசோர் திருமணம் செய்து கொல்வதாக கூறியதால் அவருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சுற்றியதாகவும் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அவரை அழைத்து சென்று கிசோர் ,உடலுறவு கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது கிசோர் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.மேலும் அவர்கள் தனியாக இருந்த போது அவருக்கு தெரியாமலேயே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்ததாகவும் அதை அவரிடம் காட்டி 56 லட்சம் பணம் பறித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கிஸோரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு புகைப்படங்களையும் வீடியோவையும் இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மனம் நொந்த அந்த பெண் கிஸோரிடம் உள்ள பணத்தையும் வீடியோவையும் பறிமுதல் செய்து தருமாறு கேட்டுள்ளார்.