BREAKING : “அத்திவரதரை” தரிசிக்க சென்று பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
40 வருடங்களுக்கு பின் தோன்றி இருக்கும் காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகானோர் சாமியை தரிசிக்க வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில்,ஏற்கனவே 2 பெண்கள் 1 ஆன் உயிரிழந்த நிலையில் இன்று சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவர் உயிரிழந்துள்ளார்.