அடர் காட்டிற்குள் செந்நாயை சுட்டு பிடிக்கும் வேட்டைக்காரனாக கிருஷ்ணா நடித்துள்ள கழுகு-2 டீசர் வெளியீடு!
கழுகு, யாமிருக்க பயமே, பண்டிகை, மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கிருஷ்ணா. இவருக்கு கழுகு திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை சிங்கார வடிவேலன் தயாரித்து உள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தில் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதால் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் செந்நாய்களை வேட்டையாடும் வேட்டைக்காரராக கிருஷ்ணா நடித்து வருகிறார்.