குமாரசாமி அரசு தப்புமா கர்நாடகாவில் பரபரப்பு -இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Default Image

கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற  ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள்  சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது . அதில்,ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக  தெரிவிக்கப்பட்டது.

நேற்று  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.மேலும்  எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்தது.இதனை அடுத்து இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாளை நடைபெறும்  நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai