நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. தற்போது இவர் ஆடை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்துள்ளார். இதற்கு பல தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை அமலாபால்-க்கும், இயக்குனர் விஜய்க்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின் மூன்று வருடங்களுக்கு பின் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து பேசிய அமலாபால், ” விஜய் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். விஜய் நல்ல மனிதர். தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.