அமெரிக்க அதிபருக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பெண் எம்.பி க்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி க்களிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருக்க விருப்பம் இல்லையென்றால் சொந்த நாட்டிற்கு செல்லுங்கள் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அவரது இந்த கருத்துக்கு உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த நியூசிலாந்து பிரதமர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தோற்றம் பற்றியோ அவர்களது வாழ்கை முறை பற்றியோ விமரிசிக்க கூடாது. மேலும் அவை என்பது பிரச்சனைகளை பேசி தீர்க்கும் இடமாகவே இருக்க வேண்டும் என்றும் பிரச்சனைகளை உருவாக்கும் இடமாக இருக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.