உலகநாயகனின் தலைவன் இருக்கிறான் படத்தின் மேலும் பல தகவல்கள்! மிரட்டும் வில்லன் கதாபாத்திரம்!

நேற்று முன்தினம் முதல் தமிழ் சினிமா செய்திகளில் முக்கிய பேசு பொருள் கமல்ஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறன் படம் தான். அதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என கூறியதும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகி விட்டது.
இப்படம் 2015ஆம் ஆண்டு சபாஷ் நாய்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே பேசப்பட்டது. இப்படத்தினை முதலில் ஹிந்தி – தமிழ் என இரு மொழிகளிலும் எடுக்க அப்போது திட்டமிட்டார் கமல்.
ஹிந்தியில் சையீப் அலிகான் ஹீரோவாக நடிக்க வைக்கவும், வில்லனாக கமலும், தமிழில் ஹீரோவாக கமல்ஹாசன் நடிப்பதாகவும் பேசப்பட்டது. காரணம் படத்தின் வில்லன் கதாபாத்திரம் அவ்வளவு ரசித்து கதாபாத்திரத்தை பலமானதாக உலகநாயகன் உருவாக்கினாராம். ஆதலால் தானே வில்லனாக நடிக்க எண்ணினாராம்.
படம் அரசியல் படம் தானாம். ஒரு சாமானியனின் அரசியல் பேசும் படமாக தலைவன் இருக்கிறான் படம் உருவாக்கவுள்ளதாம். இது கமலின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!
March 21, 2025
திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
March 21, 2025