கக்கன் திறந்த அரசு பள்ளியின் கல்வெட்டு குப்பைக்கு சென்றது!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிராரம் தாலுகா, மணியாச்சி அடுத்த உள்ளது கொல்லங்கிணறு கிராமம். அந்த கிராமத்தில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட ஹிந்து ஹரிஜன உயர்தர ஆதரவு பள்ளி 26.02.1959-ஆம் ஆண்டு திறக்கபட்டது.
தற்பொழுது இந்த பள்ளி உயர்நிலை பள்ளி மற்றும் அங்கன்வாடியாக செயல்படுகிறது. மிக பழமையான அந்த பள்ளியை அமைய காரணமாக இருந்தவர், கல்விக்கண் திறந்த காமராஜர்.
தற்பொழுது அந்த பள்ளியின் கல்வெட்டு, குப்பை கிடங்கில் கிடந்ததுள்ளது. தனது இறுதி சடங்குக்கு கூட பணம் எதுவும் சேர்த்து வைக்காத அப்போதைய பொது பணித்துறை அமைச்சர் கக்கன் திறந்து வைத்த பள்ளியின் கல்வெட்டு குப்பை கிடங்கில் கிடந்ததை பார்த்து பொதுமக்கள் கவலை பட்டு வருகின்றனர்.