நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கை வழக்கு! வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், நடிகர் தனுஷ் தனது மகன் என்று உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
இதனையடுத்து, நடிகர் தனுஷ் சார்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கதிரேசன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.