பயங்கரவாதியான ஹபீஸ்சாத் உடன் பாலஸ்தீனிய தூதர் இருந்தற்கு இந்தியா கடும் எதிர்ப்பு…!
29.12.2017 அன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதியான ஹபீஸ்சாத் உடன் பாலஸ்தீனிய தூதரகத்தில் பாலஸ்தீனிய தூதர் இருந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாலஸ்தீனிய அரசுக்கு வலுவாக கண்டனத்தை பதிவு செய்துள்ளது இந்திய வெளிவிவகார துறை அமைச்சகம்.
இந்த நிகழ்விற்காக பாலஸ்தீன அரசு மற்றும் தலைவர்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் தங்களது தூதரகத்தின் செயலை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்வதாக இந்திய அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளது இந்திய வெளிவிவகார துறை அமைச்சகம்.