Cwc19 finals: பாராசூட் மூலம் கொண்டு வரப்பட்ட பந்து !

Default Image

2019 உலகக்கோப்பை தொடரானது லீக் மற்றும் அரையிறுதி சுற்று என அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும் நியூசீலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்றைய இறுதிபோட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது.

இந்த இறுதிப்போட்டிக்கான பந்தை பாராசூட் மூலம் கொண்டு வரப்பட்டது. இங்கிலாந்து இராணுவத்தின் வான்வழி படையான ரெட் டெவில்ஸ் ஹெலிகாப்டரில் இருந்த குதித்த 10 இராணுவ வீரர்கள் பாராடசூட் மூலம் சிவப்பு நிறத்தை வெளியிட்டுக் கொண்டு தரையிறங்கினர். தரையிறங்கிய இரணுவ வீரர்கள் நடுவரிடம் பந்துகளை ஒப்படைத்தனர். இதன் பின் டாஸ் வென்ற நியூசீலாந்து அணி பேட்டிஙை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி பவுலிங் வீச தொடங்கினர். எனவே, உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்