ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்-முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் .புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்படும் .
அஞ்சல் துறையில் உதவியாளர்களை நியமிக்கும் தேர்வில் தமிழை புறக்கணித்து, பொதுமக்களின் விருப்பதிற்கு எதிராக இந்தி மொழியை திணிக்க வேண்டாம். இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரிவித்தார்.