சந்திராயன் 2 – விண்கலம் நிலவில் செய்யப்போகும் வேலை என்ன – சிறப்பு அலசல்!

Default Image

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள விக்ரம் மற்றும் ப்ரயாக்யான் என்ற இரு விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நாளை விண்ணில் அனுப்புகிறது. எந்த உலக நாடுகளும் இதுவரை செய்யாததாய் நிலவில் தரைப்பகுதியில் இறங்கும் விதமாய் இந்த சாதனையை படைக்க இருக்கிறது ISRO.

கடந்த 2008 ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 1 விண்கலமானது நிலவில் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் ஆய்வு மேற்கொண்டது. நிலவில் மனிதன் வாசிக்க முடியுமா, நிலவில் தண்ணீர் இறக்கிறதா என்பன குறித்த பல ஆய்வுகளை இந்த விண்கலம் மேற்கொண்டது.

சந்திராயன் 2 விண்கலமானது தரையில் இறங்கி ஆய்வு செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக 6 சக்கரங்கள் பொருத்திய ப்ரயாக்யான் என்ற விண்கலம் இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளது. விக்ரம் என்ற விண்கலம் நிலவின் மேற்பகுதியில் ஆய்வு செய்யும். ஜி எஸ் எல் வி ராக்கெட் மூலம் செல்லும் விண்கலங்கள் பூமியை சுற்றி 200 * 30,000 என்ற நீள் வட்டப்பாதையில் சந்திராயன் 2 விண்கலம் செல்லும்.

செயல்படும் விதம் :

நாளை விண்ணில் ஏவப்படும் விண்கலம் 3,25,000 கிலோமீட்டர் பயணித்து செப்டம்பர் 6 ம் தேதியில் நிலவிற்கு சென்றடையும் என்று தெரிகிறது.  பின்பு, தானியங்கி கலன் மூலம் ப்ரயாக்யான் விண்கலம் வெளிவந்து செயல்பட துவங்கும்.  விக்ரம் விண்கலத்தின் மென்பொருட்கள் தரை கட்டுப்பட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவை நிலவில் எடுக்கும் புகைப்படங்களை உடனடியாக தரைக்கு அனுப்பும். இதுவே சந்திராயன் 2 விண்கலம் செயல்படும் விதம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்