டாஸ் வென்ற கருப்பு சட்டை ! பேட்டிங் தேர்வு செய்தது !
நடப்பு உலகக்கோப்பையின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியும் , இங்கிலாந்து அணியும் மோத உள்ளது.இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள்: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன் ), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர் ), கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
நியூஸிலாந்து அணி வீரர்கள்: மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன் ), ரோஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.