கே.ஜி.எஃப் இயக்குனர் அடுத்ததாக யாரை இயக்க உள்ளார் தெரியுமா?!

Default Image

கன்னட சினி உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்து கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படத்தில் அசாத்தியமான சண்டை காட்சிகள், மிரட்டும் வசனங்கள் என ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை அதிர வைத்தது.

தற்போது இப்பட இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த இப்படத்தினை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக தெலுங்கு முன்னனி நடிகர் ஜூனியர் என்டிஆரிடம் கதை கூறியுள்ளாராம்.

ஜூனியர் என்டிஆர் தற்போது RRR படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருட ஜூலையில் வெளியாக உள்ளது. அதேபோல கே.ஜி.எஃப் இரண்டாம் பாகமும் அடுத்த வருட ஜூனில் வெளியாக உள்ளது. ஆதலால் இந்த இரு படங்கள் வெளியான பிறகு பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pakistan Minister Khawaja asif
AR Rahman
TN Minister Palanivel Thiyagarajan say about TN Internet
RN Ravi
PahalgamTerroristAttack
Pak Deputy PM