மாநில விருது பெற்ற தாசில்தார் வீட்டில் கணக்கில் வராத ரூ .93.5 லட்சம் மற்றும் 400 கிராம் தங்க நகைகள் பறிமுதல்!
தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கோஷம்பேட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக வேலை செய்து வருபவர் வி .லாவண்யா இவருடன் கிராம வருவாய் அதிகாரியாக இருப்பவர் அந்தையா .இவர் சமீபத்தில் விவசாயி ஒருவரிடம் மூலப்பத்திரிகை மாற்றியமைக்க ரூ. 8 லட்சம் கேட்டு உள்ளார்.
அந்த பணத்தில் தாசில்தார் வி .லாவண்யாவிற்கு ரூ. 5 லட்சமும் அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ரூ.3 லட்சமும் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.இது குறித்து அந்த விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த விவசாயி கிராம வருவாய் அதிகாரியாக இருக்கும் அந்தையாவிடம் ரூ .4 லட்சம் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அந்தையாவிடம் விசாரணை செய்யும் போது வி .லாவண்யாவிற்கும் தொடர்பு உள்ளது என கூறினார்.மேலும் தாசில்தார் அலுவலகம் மற்றும் வி .லாவண்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.சோதனையில் கணக்கில் வராத ரூ .93.5 லட்சம் மற்றும் 400 கிராம் தங்க நகைகள் மற்றும் சில பாத்திரங்கள் பறிமுதல் செய்தனர்.
தாசில்தார் வி .லாவண்யாவிடம் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தாசில்தார் வி .லாவண்யா 2017-ல் சிறந்த தாசில்தார் விருது பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.