டாக்டரா? டானா? பிக் பாஸ் ஆரவின் அசத்தலான நடிப்பில் மார்க்கெட் ராஜா டீசர் இதோ!
காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, வசூல் ராஜா என ஹிட் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளியான ஆயிரத்தில் இருவர் படமும் தோல்வி அடைய இவர் தற்போது பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவை கதாநாயகனாக வைத்து மார்க்கெட் ராஜா படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் டாக்டர் டான் என மிரட்டலாக நடித்துள்ளார். இதில் அரவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். டீசர் ரசிகர்களை கவரும் படி அமைந்துள்ளது. காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என டீசர் அமைந்துள்ளது.