நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ்-திமுக தான்-முதலமைச்சர் பழனிச்சாமி
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைத்து ஆட்சிகளிலும் ஆணவப்படுகொலைகள் நடக்கிறது. தமிழகத்தில் ஆணவப்படுகொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ்-திமுக தான்.இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளதால் எங்கள் மீது பழி போடுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
எட்டு வழிச்சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல மத்திய அரசின் திட்டம்.8 வழிச்சாலை திட்டத்தால் 70 கி.மீ. பயண தூரம் குறையும் இந்த திட்டம் வந்தால் அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்றுதான் எதிர்க்கின்றனர் என்று பேசினார்.